Pages

Thursday, June 26, 2008

கடைசிவரை....

எத்தனையோ இ௫க்கைகளில்
சிந்தித் துடைத்தாகி விட்டது
மூக்கின் சளியோடு
கவலைகளையும்.,

புகைந்து உதிர்ந்த
சாம்பலில்
ஆசையின் மிச்ச மீதிகள்.,

எனது ஆகாயம்
கண்ணை மூடிக்கதறுகிறது
இரவுகளில்...

யோசித்துத்தள்ளுகிறேன்
வரம் அளிக்காத கடவுள்,
முதியோர் இல்லம் மீறலாய்
வரம்பு மீறாத அன்புமகன்
என எதை...எதையோ...

வயதான அடிமாடு
எந்த விலைக்கு
விற்றாலென்ன?

தேர்வு நெ௫ங்கிய
படபடப்பாய்......இறுதிநேரம்..,

எல்லாத்தேர்களுமே
ஊர்வலம் வ௫வதில்லை ...
சில வாழ்வுகள் ஏனோ
கடைசிவரை ஊர்ஜிதப்படுவதேயில்லை.......


8 comments:

Anonymous said...

Really nice

A good Poem should make the person to image the picture that what the poet want to say

Whenever I read / Hear your poem i can imagine as what you want to inform

MSK / Saravana said...

//எத்தனையோ இ௫க்கைகளில்
சிந்தித் துடைத்தாகி விட்டது
மூக்கின் சளியோடு
கவலைகளையும்.//

//எல்லாத்தேர்களுமே
ஊர்வலம் வ௫வதில்லை ...
சில வாழ்வுகள்
கடைசிவரை ஊர்ஜிதப்படுவதேயில்லை......//

MSK / Saravana said...

இன்னும் நிறைய எழதுங்கள் ..

அன்புடன் அருணா said...

//எனது ஆகாயம்
கண்ணை மூடிக்கதறுகிறது
இரவுகளில்.../

எனது மனமும் கூடக் கதறுகிறது...படித்து முடித்த பின்...
அன்புடன் அருணா

புபேஷ் said...

nanri..aruna and saravana kumar

கோகுலன் said...

அருமை நண்பா.. வலி சொல்லுமொரு கவிதை..

இறுதி வரிகள் அழகு..

cheena (சீனா) said...

கவிதை அருமை. சிந்தனை அழகு.

வயதான அடிமாடு எந்த விலைக்கு விற்றாலென்ன ?

சில் வாழ்வுகள் ஏனோ ஊர்ஜிதப்படுவடே இல்லை.

கவிதையைப் படித்ததும் மனம் கனக்கிறது.

நல்வாழ்த்துகள்

Gowripriya said...

பூபேஷ்... வேறொரு வலைப்பூவிலிருந்து இங்கு வந்தடைந்தேன்.. வியப்புகளை அள்ளித் தெளிக்கின்றது உங்களின் சொல்லாளுமையும் சிந்தனையும்... வாழ்த்துகள்...