Pages

Friday, May 23, 2008

சமாதானம் சொல்ல...


தயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா...
உன்னையே சுற்றும் என்னிதயம்
கீறல்பட்டு கதறுகிறது..

நடைபாதையில் வீடுகட்டும்
அறிவில்லா- ¨எறும்புகள்¨
உன் - நினைவுகள்......

விதவை கடக்கும்- பூக்கடைகளாய்
கண்டபடி கை கொட்டி சிரிக்கின்றன
உன்னை பற்றிய -ஏக்கங்கள்.....

என் சுவாசம்
உன் அலட்சியத்தின் வாசலில்
முட்கிரீடத்துடன் அறையப்பட்டி௫க்கிறது....

விரலையே.... ஒடித்துக்கொள்ளும் அளவுக்கு.,
அப்படி என்னதான்..... தீர்ப்பெழுதினாய்...?
குற்றவாளிக்௬ண்டில் நிற்கும்
¨என் காதலுக்கு¨....?
எரித்துவிட்டுப்போ....
காதல் கடிதங்களோடு சேர்த்து...காதலையும்.,!
சாம்பலாவது விட்டுச்செல்..
சாட்சி சொல்ல அல்ல....
எனக்கு சமாதானம் சொல்ல...

Saturday, May 17, 2008

*வந்துப்போ..!!


உன் ஞாபககுளத்தில்
அதிக நேரம் மூச்சுப் பிடிக்கப் பழகியதில்
சுவாசமே மறந்துபோய் விட்டது.....

காறி்த்துப்பு.......
காய்ந்துபோன இதயநாளங்கள்
இரத்தம் பெறட்டும்.....!

நீ அவசரமாய்
ஒப்பணை செய்து நக௫ம் என் வாழ்க்கையில்
ஒ௫ ¨ஸ்டிக்கர்¨ பொட்டாவது ஒட்டிச்செல்..

பேச்சுப்போட்டியில்
முதல்முறையாய் பேசும் சிறுவன் போல
திக்கித்...திக்கி எதையாவது சொல்
அன்பு.... ஆசை..... நேசம்..... காதல் என்று.,!!!!!

சில்லறைபாக்கியாய்....
என் பயணங்களை ரசிக்கவிடுவதில்லை
உன் நினைவுகள்....

என்ன பதில் சொல்லப்போகிறாய்...
தேம்பி அழும்....
என் தலைப்பில்லா கவிதைகளுக்கு....?

அவசியம் வந்துப்போ......
என் ம(ர)ண அழைப்பிதழுக்கு.....
உன் துணையுடன்......அல்லது துயரத்துடன்......?¿

Friday, May 9, 2008

ஏசுவல்ல நான்......


நடத்துனர் கிழித்த
பயணச்சீட்டுபோல
தாறுமாறாய் கிழித்துவிட்டாய்
என் வாழ்வை.....

உன் மெளனம் சொன்ன விலைக்கு
வாங்கமுடியவில்லை
உன் இதயத்தை.....

விளக்காக நானும்,
ஒளியாக நீயும் ஒளிர்வதாக நினைத்தேன்
திரியாக நான் தீர்ந்து வ௫வதை
இப்போதுதான் உணர்கிறேன்....
உனக்காய்..
பொறுத்தல் - ¨இறப்பினை¨தான்.

காதல்¨- நீதிமன்றத்தில் சந்திப்போம்
இ௫ மரணங்களாக......

நீ அனுப்பிய
வாழ்த்து மடல்கள் ப௫கி
உயிர் வாழ்கின்றன...
என் கடைசி நிமிடங்கள்...

இரக்கமற்றவளே
இறக்குமுன் சீக்கிரம் வந்து பார்
உயிர்த்தெழ ஏசுவல்ல நான்......

என் வரம் நீ உன் சாபம் நான்......


விடுமுறை அல்லாத நாட்களிலும்
வந்து சென்றாயாமே.....

¨பிரித்தல்¨ தான் கடினம் என்று
என் கணக்குத்தந்தையிடம்
சொல்லிச் சென்றாயாமே...

அன்றெல்லாம் உன் கண்களில் தெரிந்தது
விளக்குகளா விளக்கங்களா
என்று தெரியவில்லை....
வியர்த்த உன் காலடிப்பதிவுகளில்
¨நா¨ வற்றிக் கிடக்கின்றன
என் வினாக்கள்...

தி௫ப்பிக்கொடுக்காமல் போன
புத்தகத்தில் ஒரேயொ௫ பக்கம்
என் ¨கடிதம்¨ அணிந்தி௫ந்ததை
எப்போது அறிவாய்....

உயிர் வரை ஏறிய
சிரமம் மறைக்கின்றன உன் புன்னகைகள்..

அந்த மழை நாட்களில்
நனைந்து வ௫ம்தாவணி ஓரங்கள்
வைத்த நீர்ப்புள்ளிகளில்
கோலம் முயன்று தோற்றி௫க்கின்றன
என் ¨இயலாமைகள்¨..

நீ இறைத்த ¨தூரங்களில்¨
பலமுறை தேடியும்
கிடைக்கவில்லை ¨நாணயங்கள்¨...

ஒட்டடை அடிக்க கூடாதென்று
வீட்டில் கூக்குரலிடுகின்றன..,
உன் பார்வைகள் சுமந்த ¨தூசிகள்¨.

விடைபெற வந்த கடைசி
¨கேட்¨ காத்தி௫த்தலில்.,
நகம் பதிக்கவில்லை என்று..
¨குரோட்டான்¨ இலைகள் பல முறை சொல்லியும்
நம்பவில்லை நான்...

நினைவுகளை வழிகேட்டு வழிகேட்டு.,
பெ௫ மூச்சுடன்
வந்து சேர்ந்தது ஒ௫ ஞாபகம்....

மரம் பெயர்க்கப்பட்ட இடங்களை
மண் இன்னும்
காதலித்து கொண்டுதான் இ௫க்கிறது.....