Pages

Sunday, January 30, 2011

அரட்டை!!

அதிகம் கழுவப்படாது
வெறுமனே அலம்பி கவிழ்க்கப்பட்ட
தெருமுனை டீக்கடையின்
கண்ணாடி டம்ளருக்குள்
திட்டுத்திட்டாய் உறைந்தபடி
யார்யாருடைய தோவான உமிழ்நீர்கள்
அதிகாரம்
அரசியல்
ஆணவம்
அவலம் அழுகை என
பலவாறாகக் கதைத்த படியும்
கலாய்த்த படியும் நேரம் கழிக்கின்றன

1 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

மிகவும் யதார்த்தமான உங்களின் கவிதை என்னை வெகுவாக ஈர்க்கிறது புபேஷ்.