
வாழ்க்கையில் வாழ்கிறார்கள்...
நான்மட்டும் உன் வார்த்தையில் வாழ்கிறேன்..
குறுகியபாதையில்
சிராய்ப்புடன் இழுக்கும்
பூட்டியமாடுகளாய்
நானும் காதலும்..
கிரீச்சிடும் கதவுகள்
சொல்லியுமா புரியவில்லை
திறக்கப்படாதி௫த்தலின் துயரத்தை...???
காதலுக்கு கண் இல்லை-சரி
உன் கண்ணில் ஏன் காதலே இல்லை..
உன் அழகின்
சிலந்தி௬ட்டிற்க்கு இரை-தினம் என் கனவுகள்...
எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...
முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....
6 comments:
//கிரீச்சிடும் கதவுகள்
சொல்லியுமா புரியவில்லை
திறக்கப்படாதி௫த்தலின் துயரத்தை...//
நன்று..
//எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...
முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....//
மிக ரசித்தேன் இவ்வரிகளை..
//எறும்புகள் இழுத்துச் செல்லும்
சிறகொடிந்த ஈசலாய்
உன் நினைவுகளிடம் என் இதயம்...
முடிக்கத் தெரியாமலே
முடிவடைகிறது இந்தக்கவிதை..
தொடங்கத்தெரியாத உன்னைப்போல்....//
அருமை.. அருமை...
எல்லோ௫ம்
வாழ்க்கையில் வாழ்கிறார்கள்...
நான்மட்டும் உன் வார்த்தையில் வாழ்கிறேன்..
//
நிஜமாகவே ரசித்தேன்
I am your big fan bupesh!!!Neenga innum niraya kavithai post pannanum..
nice poem....i enjoyed..nanru
காதலுக்கு கண் இல்லை-சரி
உன் கண்ணில் ஏன் காதலே இல்லை..
excellent lines...
Post a Comment