
அடுத்த வினாடி
தேவதையின் எதிர்ச்சொல்லாய்
தெரிகிறேன் உனக்கு ...
வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான்
உண்டு முடித்துக் களைத்தவனாய் நீ!!
காலையின் அவசரக்கிளம்புதலில்
காபி கொடுத்த விதத்திலிருந்து
விளக்கணைத்துப்படுத்த தாமதம் வரைக்கும்
நீண்டு வந்த வன்மம்
புரண்டு படுத்த உன் தற்செயல் புறக்கணிப்பில்
கோரைப்பற்களுடன்
பூதாகரமாய் புலப்படுகிறதெனக்கு ..
எல்லாக் காமத்திலும்
ஆணிடம் ஏதோஒருபெண்தன்மையை
எதிர்பார்க்காத பெண் இல்லை;
பெண்ணிடம் ஏதோ ஒரு ஆண் தன்மையை
எதிர்பார்க்காத ஆண் இல்லை;
கண நேர இடைவெளிக்குப்பின்
காதருகே குசுகுசுத்துச்சொல்கிறாய்
ஆங்கிலத்தில்..
உன் காதலை.....
"கொடுத்தலில் தான் காதல்;
பெறுதலில் இல்லை"என்று
எப்போதோ சொன்ன உன் கவிதை
நினைவிற்கு வந்துப்போகின்றது
இருள் நிர்வாணப்பட்டு
வெளிச்சம் ஆவதற்கு முன்.....
3 comments:
அருமையான கவிதை புபேஷ்
மிக நன்றாக உள்ளது.
ஏன் இவ்வளவு கால இடைவெளி?
அடுத்த கவிதையை உடன் எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்
this is one of your best Bupesh! kudos!!
Post a Comment