
உன் ஞாபககுளத்தில்
அதிக நேரம் மூச்சுப் பிடிக்கப் பழகியதில்
சுவாசமே மறந்துபோய் விட்டது.....
காறி்த்துப்பு.......
காய்ந்துபோன இதயநாளங்கள்
இரத்தம் பெறட்டும்.....!
நீ அவசரமாய்
ஒப்பணை செய்து நக௫ம் என் வாழ்க்கையில்
ஒ௫ ¨ஸ்டிக்கர்¨ பொட்டாவது ஒட்டிச்செல்..
பேச்சுப்போட்டியில்
முதல்முறையாய் பேசும் சிறுவன் போல
திக்கித்...திக்கி எதையாவது சொல்
அன்பு.... ஆசை..... நேசம்..... காதல் என்று.,!!!!!
சில்லறைபாக்கியாய்....
என் பயணங்களை ரசிக்கவிடுவதில்லை
உன் நினைவுகள்....
என்ன பதில் சொல்லப்போகிறாய்...
தேம்பி அழும்....
என் தலைப்பில்லா கவிதைகளுக்கு....?
அவசியம் வந்துப்போ......
என் ம(ர)ண அழைப்பிதழுக்கு.....
உன் துணையுடன்......அல்லது துயரத்துடன்......?¿
3 comments:
//சில்லறைபாக்கியாய்....
என் பயணங்களை ரசிக்கவிடுவதில்லை உன் நினைவுகள்....//
அருமையான யதார்த்தமான உவமை..
உவமைகள் - உண்மைகளாய் ஜொலிக்கின்றன. காதல் தோல்வியை இவ்வளவு அழகாக - சோகம் இழைந்தோட எழுதியது பாராட்டத்தக்கது.
சுவாசம் மறத்தல், இரத்தம் பெறுதல், பொட்டு ஒட்டுதல், ம(ர)ண அழைப்பிதழ், துணையுடன் அல்லது துயரத்துடன்
அடடா அடடா அருமை அருமை.
துயரமான துணையுடன், இன்னும் மலரும் நினைவுகளாய், கிட்டாத கனிக்கு இன்னும் ஏங்கும் காதலன் அல்லது காதலியின் பார்வை
நன்று நன்று - நல்வாழ்த்துகள்
thanks cheena
Post a Comment