
நடத்துனர் கிழித்த
பயணச்சீட்டுபோல
தாறுமாறாய் கிழித்துவிட்டாய்
என் வாழ்வை.....
உன் மெளனம் சொன்ன விலைக்கு
வாங்கமுடியவில்லை
உன் இதயத்தை.....
விளக்காக நானும்,
ஒளியாக நீயும் ஒளிர்வதாக நினைத்தேன்
திரியாக நான் தீர்ந்து வ௫வதை
இப்போதுதான் உணர்கிறேன்....
உனக்காய்..
பொறுத்தல் - ¨இறப்பினை¨தான்.
பொறுத்தல் - ¨இறப்பினை¨தான்.
காதல்¨- நீதிமன்றத்தில் சந்திப்போம்
இ௫ மரணங்களாக......
நீ அனுப்பிய
வாழ்த்து மடல்கள் ப௫கி
உயிர் வாழ்கின்றன...
என் கடைசி நிமிடங்கள்...
இரக்கமற்றவளே
இறக்குமுன் சீக்கிரம் வந்து பார்
உயிர்த்தெழ ஏசுவல்ல நான்......
2 comments:
//உன் மெளனம் சொன்ன விலைக்கு
வாங்கமுடியவில்லை
உன் இதயத்தை.....//
//இரக்கமற்றவளே
இறக்குமுன் சீக்கிரம் வந்து பார்
உயிர்த்தெழ ஏசுவல்ல நான்.....//
இந்த கவிதை நல்லா இருக்கு..
நடத்துனர் கிழிக்கும் - தாறுமாறாக கிழிக்கும் சீட்டு, வாங்க (பெற) முடியாத இதயம், தீர்ந்து போகும் திரி,
ஏசுவல்ல எப் பறை சாற்றுதல்ல்
கவிஞனின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.
நல்வாழ்த்துகள்
Post a Comment