Thursday, April 21, 2011
நீ!!!!
நேர்த்தியான உன்
உதட்டுச்சிரிப்பில்
நேர்கோட்டில் நிறுத்திவிட்டாய்
இருளையும், பகலையும்..
பொழுதுகள் அறியாது
திக்கித்திணறுகின்றன
என் காத்திருப்புகள்......
என் வானத்தை கையோடு
எடுத்துச்சென்றுவிட்டாய்
குப்பைமேடாய் குவிந்து கிடக்கின்றன
சிறகுகள்....
சன்னலடைத்த அறைக்குள்
உலர்த்தப்பட்ட கைத்துண்டாய்
உன் நினைவுக்குறிப்புகள்....
உன்னைப் பொறுத்தவரையில்
இது காதல்......
என்னைப்பொறுத்தவரை
உன்னை அடைய என் தவம்...
புலப்படாத லாவகங்களில்
புரிபடாததாய் நகர்கின்றது
உன்னை சுமந்தபடி வாழ்க்கை.
1 comments:
அழகாய் இருக்கிறது கவிதை
Post a Comment