Sunday, April 3, 2011
கனவுகள்..!
உடைந்த மேகத்தின்
கடைசிச்சொட்டுருகி
உனக்காகவே காத்திருக்கின்றது
நீ கடந்து செல்லும் மரத்தின் இலை நுனி மேல்..
குதூகலங்களின்
கும்மியிருட்டு ஒளிதல் போட்டியில்
கலந்து கொள்கிறோம்
நானும் என் கனவுகளும்...
பல்வேறு முகங்களாய் ஒளிந்திருக்கிறாய்
என்னுள் ...
கண்டுபிடிப்பதற்குள்
கலைந்து விடுகின்றன என் கனவுகள் ...
உன் பார்வைகளுக்கு முன்னே
கடினமாகிவிடுகின்றது
என் உயிரின் ஒளிதல் ..
கொதித்து அடங்கியும்
அழியாது ,மழையாய் திரும்பி வரும்
ஆவியாய்ப்போன தண்ணீர் ....
உன் நினைவுகளைப்போலவே .....
நிராயுத பாணியாய்
நிர்வாணமாய்
நிற்கின்றது என் அகங்காரம்...
என் மரணத்திலேனும்
உனக்கு புரிபடலாம்
சேர்த்துக்கட்ட மடக்க வியலா
கால் பெரு விரல்களில்
உன் காதலின் நீட்சி.....
0 comments:
Post a Comment