தாளமாய் படைக்கப்பட்டிருக்கிறாய் நீ!!..
சுருதியின் கடைசி எதிரொலியாய்
நீள்கின்றன.....
உறக்கமில்லா இரவுகளில்
அருகாமைக் கனவுகள்....
உன் இதயத்தின் வெற்றிடத்தில்
புலப்படாதொரு புள்ளியில்
ஏதேனும் ஒரு கோணத்தில்
ஒளிந்திருக்கலாம்....;
நானென அடையாளம் காணமுடியா என் நிழல்.
பேச எத்தனிக்கும் எல்லாத் தருணங்களிலும்
பேசிக்கொண்டிருந்துவிட்டு
நீ பேசவே மாட்டாயா என்கிறாய்
பேந்த விழிக்கின்றன
ஊமையாய் மாறி விட்டிருந்த
மௌனங்கள்.....
ஏதேட்சையாய் "நா" கடித்ததில்
ஆத்திகம் புகுத்தினாய்
குறை பிரசவமாய்
வலியுடன் பிதுங்கிப் பிறக்கின்றது
கனவுகளில் நாத்திகம்
நீ-நானானாய்..
நான் - நீயாக மாற நினைத்த போது
நீ- நீயாகி விட்டாயே??
உன் கடைசி நாட்களின்
கை யொப்பங் களிலேனும்
வெளிப்படலாம்
தடுமாற்றமாய்......
என்னைப்பற்றியதான ஞாபகங்கள்!!
என் மரணத்தின் கடைசிச்சொட்டு
கண்ணீரில் நிச்சயமாய் நீட்சித்திருக்கலாம்
உன் நினைவுகளை விட்டுப் பிரியும்
பிரியத்தின் அடர்த்தி....;
-புபேஷ்.
1 comments:
/// உன் கடைசி நாட்களின்
கை யொப்பங் களிலேனும்
வெளிப்படலாம்
தடுமாற்றமாய்......
என்னைப்பற்றியதான ஞாபகங்கள்!! ///
எப்படியும் மாறலாம்... நம் கையில் இல்லை...
தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment