
உனக்கும் எனக்குமான
தூரங்களை பயணச் சீட்டாக்கி
சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்...
இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில்
இரட்டைக்குழந்தையாய் கர்ப்பமடைகின்றது என்னுள்
காதலும் காமமும்....
உன் வெட்கத்தில் தீக்குளித்தது
என் நாணம்
உன் புன்னகையில் மறுபிறப்பெடுக்கும்
நம்பிக்கையில் ...
தெருமுனை ஓரத்தில்
கிழிந்து விழுந்த உன் நிழலை
பிடித்தமர்ந்து மணிக்கணக்காய்
வெயில் காய்கின்றன
நினைவுகள்....
வித்தைகாட்டிக்கும்
தடுமாறவே செய்கின்றது வாழ்க்கை
என் வாலிபத்தைப்போல்...
உன் ஆசையின் கதவுகளுக்கு
வகை வகையாய் சாவிகள்..
திறக்கப்படாத கதவிற்கு
எத்தனை சாவிகளிருந்து என்ன?
புரிந்துக்கொள்
இருளில்தான் விழிகள் அகலப்படும்
எனதருகில் தான் உனக்கு
வாழ்க்கை வசப்படும்...!!
2 comments:
அருமையான காதல் ரசனை மிகுந்தக் கவிதை . சற்று எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்சிக்கவும்
இரட்டைக்குழந்தையாய் கர்ப்பமடைகின்றது என்னுள்
காதலும் காமமும்....
polandhutteenga!!!
good
Post a Comment