
மாக்களிடத்தில்
இன்னும் அப்படியே அப்பிக்கிடக்கின்றது...
வாரம் கழித்துப்பார்க்கும்
வளர்ப்புநாய் வெளிப்படுத்தும்
பிரிவின் ஏக்கம் இப்போதெல்லாம்
பிரியமானவர்களிடத்திலும் சாத்தியப்படுவதில்லை..
கொடுத்தலும்
பெற்றுக்கொள்ளலும்
சமவிகிதத்தில் இருக்கும்வரை
நீட்டிக்கின்றன மனித உறவுகள்...
அணைத்தல் குறித்தும்,
அரவணைத்தல் குறித்தும்,
அறியாமலும்
ஆராயாமலும்
பகுத்துக்குடுக்கின்றன இந்த ஐந்தறிவுகள்..
சாபமே கிட்டும் என தெரிந்தும்
காலம் காலமாய் தவம் கிடக்கும்
இந்த ஜென்மங்களில் ,
குலமில்லை ;
கோத்ரம் இல்லை;
பிரிவினை இல்லை
பிறிதோர் மொழியும் இல்லை;
உணவுக்கும் புணர்வுக்கும்
மட்டுமே எங்களில் சண்டை..
உங்களுக்கோ எல்லாவற்றிற்கும்....!!
எங்களுக்கு மரணம் ஒரு நாள்..
உங்களுக்கோ
ஒவ்வொரு நாளும்..!!
ஏ மனிதமே!!
மொத்தமாய் ஒன்று கேட்கிறோம்.
எங்களால் முடிவதில்லை
சிரிப்பதில்லை...
உங்களால் முடிந்தும்......???
இப்போது சொல்லுங்கள்
நாங்கள் மா(ம)க்களா !!!!!¿
3 comments:
"எங்களால் முடிவதில்லை
சிரிப்பதில்லை...
உங்களால் முடிந்தும்......???"
நெத்தியடி... கவிதை அருமை புபேஷ்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
beautiful lines...hats off once more bhupi
Post a Comment