
தி௫ப்தி இன்றி முடித்தகவிதை ஒன்றைஎடுத்துக்கொண்டு
எதிர்ப்பார்ப்புகளின் வரிசையில்
காத்துக்கிடக்கின்றது என்ஆசை...
வாழ்ந்து பழகிவிட்ட அறையிலி௫ந்து
கிளம்ப மறுக்கின்றன
உன்னுடையதான நினைவுகள்....
தெ௫வில் கிடக்கும் அனாதை நாய்க்குட்டியின்
முனகல்களைகண்டு.,
எடுத்துவரவும் இயலாமல்,
விட்டுவிலகவும் முடியாமல்
தயங்கி நிற்பதாய்..,
காதலுடன் என் வாலிபம்...
உன்னையும் என்னையும்
அமரவைத்துவிட்டு
சிலுவை சுமந்தபடி கனவுகள்...
எல்லாம் நம்பிக்கைதான்.....
பகலிலும் தோன்றும் நிலவாய்,
என்றாவது புலப்படும்..
உன் விழியிலும் என் இதயம்...