எழுத்துக்கும் எண்ணத்திற்கும்
ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும்
நினைவுகளினூடே ரசனையாய்
நகர்வலம் வருகிறாய்
மறுதலிப்பின் வாசங்களினூடே
காத்திருப்பின் குமட்டலில்
சிறிது பெரிதாய் அளவுகளின்றி
பரிதாப சில்லறை ஏந்தும்
பிச்சைக்காரனின் தட்டில்
பார்வைகளால் கலைத்துத் தேடுகிறேன்
எனக்கும் வார்த்தை கிட்டுமோவென..
சிலாகித்து சிலிர்ப்பூட்டி நகரும்
உருக்குலைந்து உடைந்த மேகத்தின் சாரலென
குளிராய் ஆமோதிக்கிறாய்
கனவுகள் புணர்ந்து பெற்றெடுக்கும்
வார்த்தைகளின் வெப்பத்தை...
சத்துணவுச் சோற்றை
பிசைந்துப் பழகும்
பள்ளிச் சிறுவனின்
ஆதங்கத்தில் கடைசியாய்
கண்டுணர்கிறேன்
தனியே காதலிக்கும் அலட்சியத்தை...
-புபேஷ்.